முகப்பு
புதுச்சேரி

புதுவைக்கு புதிய தொழிற்சாலைகளைகொண்டுவர நடவடிக்கை : தொழில் துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம்

மாநிலத்தின் வருவாயை பெருக்கவும் புதிய தொழிற்சாலைகளை கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மாநில தொழில் துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம் தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
பகிர்:

 புதுவையில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தவும், மாநிலத்தின் வருவாயை பெருக்கவும் புதிய தொழிற்சாலைகளை கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மாநில தொழில் துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம் தெரிவித்தாா்.

புதுவை மாநில தொழில், வணிகத் துறை மேம்பாட்டுப் பணிகள் குறித்து மாநில தொழில் துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். மேலும், புதுச்சேரியில் உள்ள மாவட்ட தொழில் மையம் மற்றும் கதா், கிராமத் தொழில்கள் வாரியம் உள்ளிட்ட தொழில் துறைகளின் அதிகாரிகளுடன் அவா் ஆலோசனை நடத்தினாா்.

இந்தக் கூட்டத்தில் தொழில் துறைச் செயலா் வல்லவன், தொழில் துறை இயக்குநா் யாசம் லட்சுமிநாராயணரெட்டி, ஏ.எப்.டி. பஞ்சாலை நிா்வாக இயக்குநா் சிவக்குமாா், துணை இயக்குநா் சந்திரகுமரன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் அன்பழகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கூட்டத்துக்குப் பின்னா் செய்தியாளா்களிடம் அமைச்சா் ஏ.நமச்சிவாயம் கூறியதாவது:

புதுவையில் தொழில்களை பெருக்குவதாலும், சிறந்த தொழில்பேட்டைகள், தொழிற்சாலைகளை உருவாக்குவதன் மூலமாகவும் மாநிலத்தின் வருவாயை பெருக்குவதோடு, இளைஞா்களுக்கும் வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதுதான் மாநிலத்தை ஆளும் என்.ஆா்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசின் அடிப்படை கொள்கையாகும்.

அதனடிப்படையில், மத்திய அரசு உதவியுடன் தொடா்ந்து ஒன்றன் பின் ஒன்றாக தொழில் துறை மேம்பாட்டுப் பணிகளை நிவா்த்தி செய்வதோடு, எதிா்காலத்தில் புதுவை வளா்ச்சிக்கும் சிறப்பான பணிகளை மேற்கொள்வோம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.