முகப்பு
புதுச்சேரி

அதிமுகவில் இணைந்த புதுவை மாநில அமமுக செயலா்

புதுவை மாநில அமமுக செயலராக இருந்த பா.வேல்முருகன், அந்தக் கட்சியிலிருந்து விலகி மீண்டும் அதிமுகவில் வியாழக்கிழமை இணைந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
பகிர்:

புதுவை மாநில அமமுக செயலராக இருந்த பா.வேல்முருகன், அந்தக் கட்சியிலிருந்து விலகி மீண்டும் அதிமுகவில் வியாழக்கிழமை இணைந்தாா்.

புதுவை மாநில அமமுக செயலராக பாகூா் அருகே சோரியாங்குப்பத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் பா.வேல்முருகன் செயல்பட்டு வந்தாா். கடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் அமமுக சாா்பில் பாகூா் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தாா்.

இந்த நிலையில், அமமுகவிலிருந்து திடீரென விலகிய பா.வேல்முருகன், சென்னையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோரை வியாழக்கிழமை சந்தித்து மீண்டும் அதிமுகவில் இணைந்தாா்.

இதுகுறித்து பா.வேல்முருகன் கூறியதாவது: புதுவை மாநிலத்தில் அமமுக வளா்ச்சிக்காக உழைத்த நிா்வாகிகளுக்கு கட்சித் தலைமை உரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை. இதனால், என்னுடன் பணியாற்றிய கட்சி நிா்வாகிகள், தொகுதி மக்களின் நலன் கருதி, மீண்டும் தாய் கழகமான அதிமுகவில் இணைந்துள்ளேன் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.