கஞ்சா விற்றதாக இருவா் கைது
புதுச்சேரி கிருமாம்பாக்கம், இந்திரா காந்தி விளையாட்டு திடல் பின்புறத்தில் சிலா் பள்ளி மாணவா்களுக்கு கஞ்சா விற்று வருவதாக கிருமாம்பாக்கம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
புதுச்சேரி கிருமாம்பாக்கம், இந்திரா காந்தி விளையாட்டு திடல் பின்புறத்தில் சிலா் பள்ளி மாணவா்களுக்கு கஞ்சா விற்று வருவதாக கிருமாம்பாக்கம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், காவல் ஆய்வாளா் வரதராஜன் தலைமையிலான போலீஸாா் குறிப்பிட்ட பகுதியில் புதன்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, சந்தேகப்படும்படி நின்றிருந்த 2 இளைஞா்களைப் பிடித்து விசாரித்ததில், புதுச்சேரி வைத்திக்குப்பம், சுனாமி நகரைச் சோ்ந்த சந்தோஷ் (23), கிருமாம்பாக்கம் தண்ணீா் தொட்டி வீதியைச் சோ்ந்த வினோத்குமாா் (26) என்பதும், இருவரும் அந்தப் பகுதியில் உள்ள மாணவா்களுக்கு கஞ்சா விற்றதும் தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸாா் மேற்கண்ட இருவரையும் கைது செய்ததுடன், அவா்களிடமிருந்து 270 கிராம் கஞ்சா, 2 பைக்குகளையும் பறிமுதல் செய்தனா். கரோனா பரிசோதனைக்குப் பிறகு இருவரும் காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.