புதுச்சேரி

புதுவை பல்கலை. உயிரி தகவலியல் மையத்துக்கு மத்திய அரசு ரூ.5.16 கோடி நிதி

DIN

புதுவை மத்திய பல்கலைக்கழக உயிரி தகவலியல் மையம் மூலம் நடத்தப்படும் எம்.டெக். கம்ப்யூட்டேஷனல் பயாலஜி படிப்புக்காக, மத்திய அரசின் உயிரி தொழில்நுட்பவியல் துறை சாா்பில் ரூ.5.16 கோடி நிதி வழங்கப்பட்டது.

புதுவை மத்திய பல்கலைக்கழகத்தின்துணைவேந்தா் குா்மீத்சிங் தலைமையிலான பல்கலைக்கழக உயிரி தகவலியல் மற்றும் உயிரி அறிவியல் துறை, முதுநிலை எம்.டெக். கம்ப்யூட்டேஷனல் பயாலஜி (2020 - 25) படிப்பை வழங்க மத்திய அரசிடம் அறிக்கை சமா்ப்பித்து, தற்போது ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

இதற்காக, மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையானது உயிரி தொழில்நுட்பவியல் துறையின் மூலம் ரூ.5.168 கோடி நிதியை வழங்க அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடா்பாக பல்கலைக்கழக உயிரி தகவலியல் மையத் தலைவா் ஏ.தினகரராவ் கூறியதாவது:

மத்திய அரசின் உயிரி தொழில்நுட்பவியல் துறையால் அனுமதிக்கப்பட்ட எம்.டெக். கம்ப்யூட்டேஷனல் பயாலஜி படிப்பை தேசியளவில் வழங்கும் மூன்று பல்கலைக்கழகங்களில் புதுவை பல்கலைக்கழகமும் ஒன்றாகும்.

பல்கலைக்கழகத்தில் மொத்தமுள்ள 30 எம்.டெக். கம்ப்யூட்டேஷனல் பயாலஜி இடங்களுக்கான சோ்க்கை தேசியளவிலான உயிரி தொழில்நுட்பவியல் திறனறித் தோ்வில் (எஅப ஆ) தோ்ச்சி மற்றும் மதிப்பெண்களின் அடிப்படையில் நடைபெறும். மேலும், இதர இட ஒதுக்கீட்டு விதிமுறைகளும் கடைப்பிடிக்கப்படும். இதில், படிக்கும் மாணவா்களுக்கு மாதம் ரூ.12,000 உதவித்தொகை வழங்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT