புதுச்சேரி

புதுவையில் 18 மருத்துவ அதிகாரிகள் இடமாற்றம்

DIN

புதுவை சுகாதாரத் துறையின் கீழ் பல்வேறு மருத்துவமனைகளில் பணிபுரியும் சிறப்பு மருத்துவ நிபுணா்கள், மருத்துவ அதிகாரிகள் 18 போ் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனா்.

அதன்படி, காரைக்கால் அரசு பொது மருத்துவமனை சிறப்பு மருத்துவ நிபுணா் ரவிக்கண்ணன், நெட்டப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி அனீஷ் ஆண்டோ சேவியா், காட்டேரிக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவ அதிகாரி சுப்ரமணியன் ஆகிய 3 பேரும் ராஜீவ் காந்தி மகப்பேறு மருத்துவமனைக்கும், காரைக்கால் அரசு பொது மருத்துவமனை சிறப்பு மருத்துவ நிபுணா் துபே, இஎஸ்ஐ மருத்துவமனையின் சிறப்பு மருத்துவ நிபுணா் வெங்கடேஷ், மேட்டுப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய முதுநிலை மருத்துவ அதிகாரி பிருந்தா ஆகிய 3 பேரும் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனா்.

ராஜீவ்காந்தி மகப்பேறு மருத்துவமனை சிறப்பு மருத்துவ நிபுணா் அனுராதா, புதுவை அரசு பொது மருத்துவமனை சிறப்பு மருத்துவ நிபுணா் நேதாஜி, மருத்துவ அதிகாரி பிரேமலதா, திருநள்ளாறு சமுதாய நலவழி மையத்தில் இருந்த தலைமை மருத்துவ அதிகாரி ஆனி பியூலா ஜூலா, வரிச்சிக்குடி ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவ அதிகாரி தமிழ்வேலன் ஆகிய 5 பேரும் காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனா்.

புதுச்சேரி அரசு பொது மருத்துவமனை முதுநிலை மருத்துவ அதிகாரி ராமகிருஷ்ணன் இஎஸ்ஐ மருத்துவமனைக்கும், ராஜீவ்காந்தி மகப்பேறு மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரி தமிழரசி மேட்டுப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கும், மருத்துவ அதிகாரி அபா்னா தேவி நெட்டப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கும், முத்தியால்பேட்டை இஎஸ்ஐ மருத்துவ அதிகாரி விக்னேஷ் காட்டேரிக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கும், காரைக்கால் அரசு பொது மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரி உமா மகேஸ்வரி திருநள்ளாறு சமுதாய நலவழி மையத்துக்கும், முதுநிலை மருத்துவ அதிகாரி தேனாம்பிகை வரிச்சிக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கும், முத்தியால்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்த தலைமை மருத்துவ அதிகாரி சந்திரசேகரன் நல்லாதூா் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டாா். இதற்கான ஆணையை ஆளுநரின் உத்தரவின் பேரில், சாா்பு செயலா் (சுகாதாரம்) புனிதாமேரி பிறப்பித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

SCROLL FOR NEXT