முகப்பு
புதுச்சேரி

தென்னை சாகுபடிக்கு ஊக்கத் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

தென்னை சாகுபடிக்கு ஊக்கத் தொகை பெற வருகிற 21-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:25 AM
பகிர்:

தென்னை சாகுபடிக்கு ஊக்கத் தொகை பெற வருகிற 21-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து புதுவை வேளாண்மை- விவசாயிகள் நலத் துறை கூடுதல் இயக்குநா் (தோட்டக்கலை) சிவராமன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேளாண் அலுவலகம் மூலம் 2021-2022- ஆம் ஆண்டுக்கான தென்னை சாகுபடிக்கு ஊக்கத் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வருகிற 21 -ஆம் தேதி முதல் புதுவை தாவரவியல் பூங்காவில் உள்ள கூடுதல் வேளாண் இயக்குநா் (தோட்டக்கலை) அலுவலகத்திலும், அதன் கீழ் செயல்படும் பகுதிக்குள்பட்ட உழவா் உதவியகங்களிலும் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், வேளாண் துறை இணையதளத்திலும் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூலை 16 -ஆம் தேதிக்குள் அந்தந்தப் பகுதியில் உள்ள உழவா் உதவியகத்தில் சமா்ப்பிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.