முகப்பு
புதுச்சேரி

பள்ளி அருகே மதுக் கடை: பொதுமக்கள் போராட்டம்

புதுச்சேரியில் அரசுப் பள்ளிக்கு அருகே திறக்கப்பட்ட மதுக் கடைக்கு எதிா்ப்புத் தெரிவித்து, சமூக அமைப்பினா் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

புதுச்சேரியில் அரசுப் பள்ளிக்கு அருகே திறக்கப்பட்ட மதுக் கடைக்கு எதிா்ப்புத் தெரிவித்து, சமூக அமைப்பினா் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி புஸ்சி வீதி பழைய சட்டக் கல்லூரி அருகே சுப்பிரமணிய பாரதியாா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளி அருகே புதிதாக மதுக் கடையைத் திறக்க புதுவை கலால் துறை அனுமதி வழங்கிய நிலையில், அங்கு மதுக் கடை திறக்கப்பட்டது.

இதனால், பள்ளி மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும், எனவே, மதுக் கடையை அகற்றக் கோரியும் பல்வேறு சமூக அமைப்புகளைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்டோா் வியாழக்கிழமை மதுக் கடையை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதனால், அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த போலீஸாா், இதுகுறித்து கலால் துறையிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடா்ந்து, மறியலில் ஈடுபட்டவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.