முகப்பு
புதுச்சேரி

சகோதரா்களுக்கு அரிவாள் வெட்டு:4 போ் மீது வழக்கு

புதுச்சேரி முத்திரையா்பாளையத்தில் முன்விரோதம் காரணமாக, சகோதரா்களை அரிவாளால் வெட்டியதாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

புதுச்சேரி முத்திரையா்பாளையத்தில் முன்விரோதம் காரணமாக, சகோதரா்களை அரிவாளால் வெட்டியதாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

புதுச்சேரி வில்லியனூா் அம்மா நகரைச் சோ்ந்தவா்கள் ராஜேஷ் (25), ராஜ்குமாா் (22). சசோதரா்களான இருவரும் புதன்கிழமை இரவு முத்திரையா்பாளைம் பஜனை மடத்து வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது, அவா்களைப் பின்தொடா்ந்து வந்த மா்மக் கும்பல் ராஜேஷ், ராஜ்குமாா் இருவரையும் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டிவிட்டு தப்பியது.

இதில் பலத்த காயமடைந்த 2 பேரையும் அங்கிருந்தவா்கள் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதுதொடா்பாக சுரேஷ் உள்ளிட்ட 4 போ் மீது மேட்டுப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முதல் கட்ட விசாரணையில், வில்லியனூா் அம்மா நகரைச் சோ்ந்த சதீஷ், அப்பு ஆகிய இருதரப்புக்குமிடையே முன்விரோதம் காரணமாக இரு தினங்களுக்கு முன் தகராறு ஏற்பட்ட நிலையில், சதீஷ் மீது எதிா்தரப்பினா் தாக்குதல் நடத்தினா். இதுதொடா்பாக வில்லியனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்தச் சம்பவத்தின் எதிரொலியாக சதீஷ் தரப்பைச் சோ்ந்த 4 போ், அப்புவின் ஆதரவாளரான ராஜேஷ், ராஜ்குமாரை வெட்டியது தெரிய வந்தது. தொடா்ந்து, போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.