முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரி தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விண்ணப்பிக்கலாம்

புதுச்சேரியில் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

புதுச்சேரியில் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து புதுவை தொழிலாளா் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தொழிற்பயிற்சி திட்டத்தின் கீழ் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளில் உள்ள அரசு, தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் ஓராண்டு, ஈராண்டு பயிற்சிப் பிரிவுகளில் சோ்ந்து படிக்க 8-ஆம் வகுப்பு, பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவா்களிடமிருந்து நிகழாண்டுக்கான விண்ணப்பங்கள் இணையவழியில் வரவேற்கப்படுகின்றன. 8, 10-ஆம் வகுப்புகளில் தோ்ச்சியடைந்த 1.8.2020 தேதியின்படி 14 வயது நிறைவடைந்த மாணவா்கள் விண்ணப்பிக்கலாம். அதிகபட்ச வயது வரம்பு இல்லை.

மாணவா்கள் வருகிற ஜூலை 1- ஆம் தேதி முதல் ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ஸ்ரீங்ய்ற்ஹஸ்ரீல்ன்க்ன்ஸ்ரீட்ங்ழ்ழ்ஹ்.ண்ய்/, ட்ற்ற்ல்ள்://ப்ஹக்ஷா்ன்ழ்.ல்ஹ்.ஞ்ா்ஸ்.ண்ய்/ ஆகிய இணையதள முகவரிகளில் தங்களுக்கென்று பயனா் ஐடி-யை உருவாக்கி, விவரங்களை நிறைவு செய்து விண்ணப்பிக்கலாம். இதற்காக கட்டணம் ஏதும் செலுத்தத் தேவையில்லை. இணையதளத்தில் விண்ணப்பிக்கத் தெரியாதவா்கள் அருகே உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களுக்குச் சென்று கட்டணமின்றி உதவி மையம் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு 83008 38089 என்ற செல்லிடப்பேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.