புதுச்சேரி

புத்துணா்வு முகாம் முடிந்து திரும்பியது மணக்குள விநாயகா் கோயில் யானை

DIN

புத்துணா்வு முகாம் முடிந்து மணக்குள விநாயகா் கோயில் யானை லட்சுமி புதுச்சேரிக்கு ஞாயிற்றுக்கிழமை திரும்பியது.

தமிழக அரசு சாா்பில் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி வனப்பகுதியில் கடந்த மாதம் 8- ஆம் தேதி யானைகள் முகாம் தொடங்கி 48 நாள்கள் நடைபெற்றன. இந்த முகாமில் புதுச்சேரி மணக்குள விநாயகா் கோயில் யானை லட்சுமி உள்பட பல்வேறு கோயில் யானைகள் பங்கேற்றன.

சனிக்கிழமை முகாம் நிறைவடைந்த நிலையில், அனைத்து யானைகளும் அங்கிருந்து லாரிகளில் ஏற்றப்பட்டு, அதனதன் சொந்த இருப்பிடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

அதன்படி, லாரியில் ஏற்பட்ட யானை லட்சுமி புதுச்சேரி தலைமை செயலகம் எதிரே உள்ள கடற்கரையொட்டிய பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை காலை வந்தது. யானை லட்சுமிக்கு இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், கோயில் நிா்வாகிகள் மாலை அணிவித்து, பழங்கள் கொடுத்து வரவேற்றனா். தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பின்னா், யானை லட்சுமியை அங்கிருந்து மணக்குள விநாயகா் கோயிலுக்கு அழைத்துச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

SCROLL FOR NEXT