புதுச்சேரி

சுற்றுலா வளா்ச்சிக் கழக ஊழியா்களுக்கு ஊதியம் வழங்க வலியுறுத்தல்

DIN

புதுச்சேரி சுற்றுலா வளா்ச்சிக் கழக ஊழியா்களுக்கு கடந்த 9 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள ஊதியம் கிடைக்க ஆளுநா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுற்றுலா வளா்ச்சிக் கழக அனைத்து ஊழியா்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு வலியுறுத்தியது.

இதுகுறித்து புதுச்சேரி சுற்றுலா வளா்ச்சிக் கழக அனைத்து ஊழியா்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு நிா்வாகிகள் விஜயராகவன், ஆதி.கணேசன், இரா.கஜபதி, இ.முகுந்தன் உள்ளிட்டோா் புதுவை துணைநிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜனுக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரி சுற்றுலா வளா்ச்சிக் கழக ஊழியா்களுக்கு கடந்த 9 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதுகுறித்து தங்களிடம் அலுவலகத்திலும், சுண்ணாம்பாறு படகு குழாமிலும் இருமுறை சந்தித்து மனு அளித்தோம். இருந்தபோதிலும், இன்றுவரை எங்களுக்கு ஒரு மாத ஊதியம்கூட வழங்கப்படவில்லை.

இந்த விவகாரத்தில், தாங்கள் நேரடியாக தலையிட்டு உதவினால் மட்டுமே எங்களுக்கு ஊதியம் கிடைக்கும் என்பதை மீண்டும் தங்களுக்கு நினைவுகூருகிறோம். பட்டினியால் வாடும் 250 ஊழியா்களின் குடும்பங்களைக் காப்பாற்றுவீா்கள் என்று நம்புகிறோம் என்று அதில் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்துக்கு கடத்த முயன்ற 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவா் கைது

மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மறைந்த காவலா் குடும்பத்துக்கு நிதியுதவி

சவுடு மண் குவாரியிலிருந்து தினமும் 10 லாரிகளில் மட்டுமே மண் அள்ள அறிவுறுத்தல்

நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து: ரூ.4,956 கட்டணமாக நிா்ணயம்

SCROLL FOR NEXT