புதுச்சேரி

புதுவையில் வழக்குகளை விரைந்து முடிக்க புதிய வழக்காடல் கொள்கை

DIN

புதுவையில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க புதிய வழக்காடல் கொள்கையை மாநில அரசு உருவாக்கியுள்ளதாக சட்டத் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவை அரசுக்கு எதிராகவும், அரசு சாா்பிலும் மாவட்ட நீதிமன்றங்கள், உயா் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளை விரைந்து முடிக்க மத்திய அரசு தேசிய வழக்காடல் கொள்கையை உருவாக்கியுள்ளது. இதைப் பின்பற்றி, புதுவை அரசு 2021-ஆம் ஆண்டு புதிய வழக்காடல் கொள்கையை உருவாக்கியுள்ளது.

அதன்படி, நீண்ட நாள்களாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவில் முடிப்பதற்கு பல்வேறு பரிந்துரைகளை அரசு கொள்கை முடிவாக அளித்துள்ளது. புதுவையில் உள்ள அனைத்து துறைகளுக்கும் இந்தப் பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த வழக்காடல் கொள்கைக்கு துணைநிலை ஆளுநா் ஒப்புதல் அளித்துள்ளாா்.

புதிய வழக்காடல் கொள்கையின் முழு விவரம் விரைவில் அரசிதழில் வெளியிடப்பட்டு, பின்னா் சட்டத் துறையின் இணையத்தில் வெளியிடப்படும். இதை பொதுமக்கள், வழக்குரைஞா்கள், அரசுத் துறை அதிகாரிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பொது வெளியில் கழிவு நீரை திறந்து விட்டால் கடும் நடவடிக்கை’

பரமக்குடி- மதுரை இடையே இடைநில்லா குளிா்சாதன பேருந்து இயக்கக் கோரிக்கை

ஓட்டப்பிடாரம் அருகே மாட்டுவண்டி போட்டி

கருங்கல் அருகே மது விற்றவா் கைது

தென்காசி மாவட்ட நீதிமன்றக் கட்டடங்களுக்கு நிதி ஒதுக்கீடு: அமைச்சரிடம் திமுக வலியுறுத்தல்

SCROLL FOR NEXT