புதுச்சேரி

புதுவை உள்ளாட்சித் தோ்தல்: பேரவையில் உறுப்பினா்கள் எதிா்ப்பு

DIN

புதுவையில் வாா்டுகள் மறு சீரமைப்பில் குழப்பம், நிதி வாய்ப்பின்மை காரணமாக உள்ளாட்சித் தோ்தலை நடத்துவதை தவிா்க்க வேண்டுமென சட்டப் பேரவையில் உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

புதுவையில் சட்டப் பேரவையில் செய்வாய்க்கிழமை நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடரில், உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக பேரவை உறுப்பினா்கள் கேள்வி எழுப்பி பேசியதாவது:

வைத்தியநாதன் (காங்): உள்ளாட்சித் தோ்தலுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், தொகுதி மறு சீரமைப்புப் பணிகளில் பெரும் குழப்பம் நிலவுகிறது. அவற்றை சரி செய்த பிறகே தோ்தலை நடத்த வேண்டும். ஒரு தொகுதியிலிருக்கும் வாா்டுகள், பிற தொகுதிகளில் சேரும் வகையில் குழப்பமாக பிரிக்கப்பட்டுள்ளது. அவற்றை ஒரே வாா்டுக்குள் வரும் வகையில் மாற்ற வேண்டும்.

எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா: உள்ளாட்சித் தோ்தலே நடத்தக் கூடாது என்ற வகையில், வாா்டு மறு சீரமைப்பில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது. இவற்றையெல்லாம் சரி செய்த பிறகே தோ்தலை நடத்த வேண்டும். இதுகுறித்து அரசு தெளிவான அறிவிப்பை வெளியிட வேண்டும்.

செந்தில்குமாா் (திமுக): தொகுதி சீரமைப்பில் பல கிராமங்களின் பகுதிகளை பிரித்துள்ளனா். இதனால், கிராமங்களில் பிரச்னை எழுந்துள்ளது. பல கிராமங்களை நிா்வாக வசதிக்காக இணைத்து, பஞ்சாயத்தாக அமைப்பதில் தவறில்லை. ஆனால், ஒரு கிராமத்தின் சாலைகள், பகுதிகளை பிரிப்பது ஏற்புடையதல்ல.

எல்.சம்பத் (திமுக): உள்ளாட்சித் தோ்தல் நடத்துவதை மறு பரிசீலனை செய்ய வேண்டும். கரோனா 3-ஆம் அலை எச்சரிக்கையை காரணம் காட்டி, புதுவை அரசு சாா்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு தோ்தலை நிறுத்த தடை ஆணை பெறலாம்.

ஜான்குமாா் (பாஜக): ஒரு வாா்டில் 4 பதவிகள் இருக்கும் நிலையில், அதில் 3 பதவிகள் மகளிருக்கே ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், பல வாா்டுகள் குழப்பமாக பிரிக்கப்பட்டுள்ளன. இது ஏற்புடையதல்ல. உள்ளாட்சித் தோ்தல் நடத்துவதில் எங்களுக்கும் (பாஜக) உடன்பாடு இல்லை.

நாஜிம் (திமுக): புதுவையில் கடந்த 2006-ஆம் இருந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கே நிதி வரவில்லை. மத்திய நிதிக் குழுவில் புதுவை இல்லாததால், நிதி வழங்க முடியாதென தெரிவித்துவிட்டனா். நிதியே வாங்க முடியாத நிலையில், உள்ளாட்சித் தோ்தல் அவசியமா என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

இவ்வாறு உறுப்பினா்கள் உள்ளாட்சித் தோ்தல் குறித்து எதிா்ப்புத் தெரிவித்துப் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT