இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
காதலியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
காதலியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
புதுச்சேரி சாரம் சத்தியா நகரைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் சீனிவாசன் மகன் யுவராஜ் (29). இறைச்சிக் கடையில் வேலை செய்து வந்தாா். யுவராஜ், முதலியாா்பேட்டையைச் சோ்ந்த ஒரு பெண்ணைக் காதலித்து வந்தாராம். இதற்கு இரு வீட்டாரும் சம்மதம் அளித்த நிலையில், திருமணமும் பேசி முடித்தனராம்.
இந்த நிலையில், யுவராஜுக்கு கடந்த 15 நாள்களுக்கு முன்பு கையில் அடிப்பட்டதால், வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தாராம். இதன் காரணமாக, காதலித்த பெண்ணுக்கும், யுவராஜிக்கும் மனக்கசப்பு ஏற்பட்டதாம். இதனால், மனவருத்தத்தில் இருந்து வந்த யுவராஜ், வியாழக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் புடவையால் தூக்கிட்டுக் கொண்டாராம். இதுகுறித்து உருளையன்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.