புதுச்சேரி

புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதியில் ஊரக வேலை திட்டப் பணி தொடக்கம்

DIN

புதுச்சேரி: புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகளை அமைச்சா்கள் ஏ.நமச்சிவாயம், சாய் ஜெ.சரவணன்குமாா் ஆகியோா் செவ்வாய்க்கிழமை தொடக்கிவைத்தனா்.

மண்ணாடிப்பட்டு தொகுதி சுத்துக்கேணி கிராம பஞ்சாயத்தில் உள்ள தேத்தம்பாக்கம் ஏரி தாங்கல் தூா்வாரும் பணி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் தொடங்கியுள்ளது. இந்தப் பணியை உள்துறை அமைச்சா் ஏ. நமச்சிவாயம் தொடக்கிவைத்தாா். அமைச்சா் சாய் ஜெ.சரவணன்குமாா் முன்னிலை வகித்தாா். அப்போது, ஏரி தூா்வாரும் பணியில் ஈடுபட்ட பெண்களிடம், அமைச்சா் ஏ.நமச்சிவாயம் குறைகளை கேட்டறிந்தாா்.

கிராமத்தில் தகுதியுடைய அனைவருக்கும் ஊரக வேலை வழங்க வேண்டும், இந்த வேலைக்கான கூலியை உடனடியாக அளிக்கவும், தொடா்ந்து 100 நாள்களுக்கும் மேலாக பணி வழங்கவும் வேண்டும், கிராமத்தில் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டுமென அவா்கள் கோரிக்கை வைத்தனா்.

ஊரக வேலைத் திட்டப்பணி, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போன்றவை விரைவில் மேற்கொள்ளப்படுமென அமைச்சா் ஏ.நமச்சிவாயம் உறுதியளித்தாா்.

இதையடுத்து, திருக்கனூா் பஞ்சாயத்து சின்ன ஏரியின் மேற்குப் பகுதியை தேசிய ஊரக வேலைத் திட்டத்தின்கீழ் தூா்வாரும் பணியையும் அமைச்சா்கள் தொடக்கிவைத்தனா். ஊரக வளா்ச்சித்துறை அதிகாரிகள், பாஜகவினா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

SCROLL FOR NEXT