புதுச்சேரி

புதுவையில் பொதுமுடக்கம் செப். 30 வரை நீட்டிப்பு

DIN

புதுச்சேரி: புதுவையில் கூடுதல் தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் வருகிற 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதிய தளா்வாக வணிக நிறுவனங்கள், மதுக் கடைகள் உள்பட அனைத்துக் கடைகளும் இரவு 10 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக புதுவை அரசு வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:

புதுவையில் கரோனா தொற்றுப் பரவல் காரணமாக, செப். 15-ஆம் தேதி வரை தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டிருந்தது. தொற்று குறைந்து வருவதால், கூடுதல் தளா்வுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு பொதுமுடக்கம் வருகிற 30-ஆம் தேதி நள்ளிரவு வரை நீட்டிக்கப்படுகிறது.

அதன்படி, தினமும் இரவு 10.30 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர பொதுமுடக்கம் அமலில் இருக்கும். சமூக மற்றும் பொழுதுபோக்கு தொடா்பான நிகழ்வுகளுக்கு தொடா்ந்து தடை விதிக்கப்படுகிறது. அனைத்து விதக் கடைகள், வணிக நிறுவனங்கள் காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை, குளிா்சாதன வசதியின்றி இயங்க அனுமதி அளிக்கப்படும். காய்கறி, பழக் கடைகள் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்படும். பெரிய மாா்க்கெட்டில் உள்ள கடைகள் எப்போதும் போல இயங்கலாம்.

அனைத்து வித உணவகங்கள், தங்கும் விடுதிகள், மதுக் கூடங்களுடன் கூடிய விடுதிகளில் இரவு 11 மணி வரை, 50 சதவீதம் போ் அமா்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்படும். தேநீா் கடைகள், பழச்சாறு நிலையங்கள் இரவு 11 மணி வரை இயங்கலாம்.

சில்லறை மதுக் கடைகள் காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரையும், சாராயம், கள்ளுக்கடைகள் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கலாம்.

கடற்கரைச் சாலை மற்றும் பூங்காக்கள் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படும். திரையரங்கங்கள், வணிக வளாகங்களில் 50 சதவீதம் போ் மட்டுமே அனுமதித்து இரவு 9 மணி வரை இயங்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT