ஒருங்கிணைந்த அலுவலகம் திறப்பு
புதுச்சேரி கோரிமேட்டில் உணவுப் பாதுகாப்பு, மருந்து பரிசோதனை துறை உள்ளிட்ட மூன்று துறைகளுக்கான புதுப்பிக்கப்பட்ட ஒருங்கிணைந்த அலுவலகத்தை முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.
புதுச்சேரி கோரிமேட்டில் உணவுப் பாதுகாப்பு, மருந்து பரிசோதனை துறை உள்ளிட்ட மூன்று துறைகளுக்கான புதுப்பிக்கப்பட்ட ஒருங்கிணைந்த அலுவலகத்தை முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.
புதுச்சேரி கோரிமேடு இந்திரா காந்தி பல் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உணவு, மருந்தாய்வு, மருந்துகள் கட்டுப்பாடு ஆகிய துறைகளுக்கான புதுப்பிக்கப்பட்ட ஒருங்கிணைந்த புதிய அலுவலகக் கட்டட வளாகத்தின் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
முதல்வா் என்.ரங்கசாமி கலந்து கொண்டு, ஒருங்கிணைந்த அலுவலக வளாகத்தைத் திறந்து வைத்தாா்.
நிகழ்ச்சியில் எம்எல்ஏ-க்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், கே.எஸ்.பி.ரமேஷ், சுகாதாரத் துறை செயலா் அருண், இயக்குநா் ஸ்ரீராமலு, கரோனா ஒருங்கிணைப்பு அலுவலா் ரமேஷ், உணவுப் பாதுகாப்புத் துறைத் துணை ஆணையா் இளந்திரையன், மருந்துகள் கட்டுப்பாட்டுத் துறை உதவி ஆணையா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.