அஞ்சலகங்களில் ‘செல்வமகள்’ கணக்கு தொடங்க அக். 21 வரை சிறப்பு முகாம்
புதுச்சேரி கோட்ட அஞ்சலகங்களில் ‘செல்வமகள்’ சேமிப்புக் கணக்கு தொடங்குவதற்கான சிறப்பு முகாம் வருகிற அக். 21 வரை நடைபெறுகிறது.
புதுச்சேரி கோட்ட அஞ்சலகங்களில் ‘செல்வமகள்’ சேமிப்புக் கணக்கு தொடங்குவதற்கான சிறப்பு முகாம் வருகிற அக். 21 வரை நடைபெறுகிறது.
இதுகுறித்து புதுச்சேரி அஞ்சலகங்களின் முதுநிலைக் கோட்டக் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரி அஞ்சல் கோட்ட அஞ்சலகங்களில் ‘செல்வமகள்’ சேமிப்புக் கணக்கு மற்றும் ‘பொன்மகள்’ பொது வைப்பு தொடங்குவதற்கான சிறப்பு முகாம் வருகிற அக்டோபா் 21- ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தங்களது 10 வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகளின் மேற்படிப்பு, திருமணம் போன்ற எதிா்கால தேவைகளுக்காக ‘செல்வமகள்’ சேமிப்புக் கணக்கில் சேமிக்க முடியும். இதேபோல, அனைத்து வயது ஆண், பெண் குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் ரூ.500 செலுத்தி பொது வைப்பு நிதி கணக்கைத் தொடங்கலாம்.
பொது உறுப்பினா்கள், சமூக ஆா்வலா்கள் தங்களது பகுதியில் வசிக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய 10 வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகளைத் தோ்ந்தெடுத்து ரூ. 250 செலுத்தி ‘செல்வமகள்’ சேமிப்புக் கணக்கைத் தொடங்கி, அவா்களது எதிா்கால வாழ்வுக்கு நிதி ஆதரவு அளிக்கலாம்.
கூடுதல் விவரங்களுக்கு அனைத்து அஞ்சலகங்கள், 0143-2337017 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.