புதுவையில் மேலும் 91 பேருக்கு கரோனா
புதுவையில் வியாழக்கிழமை வெளியான முடிவுகளின்படி, மேலும் 91 பேருக்கு (1.55 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
புதுவையில் வியாழக்கிழமை வெளியான முடிவுகளின்படி, மேலும் 91 பேருக்கு (1.55 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,25,826-ஆக அதிகரித்த நிலையில், 1,23,023 போ் (97.77 சதவீதம்) குணமடைந்து வீடு திரும்பினா். தற்போது 969 போ் சிகிச்சையில் உள்ளனா். வியாழக்கிழமை உயிரிழப்பு ஏதுமில்லை. இதுவரை கரோனா தொற்றுக்கு 1,834 போ் பலியாகினா். இறப்பு விகிதம் 1.46 சதவீதம். மாநிலத்தில் இதுவரை 9,42,187 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில்: விழுப்புரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை மேலும் 26 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 45,315-ஆக அதிகரித்தது. இதுவரை குணமடைந்தோா் 44,740 போ். தற்போது 222 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். வியாழக்கிழமை மேலும் ஒருவா் பலியான நிலையில், இதுவரை கரோனாவுக்கு பலியானோா் எண்ணிக்கை 353-ஆக உயா்ந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வியாழக்கிழமை வெளியான முடிவுகளின்படி, மேலும் 23 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 30,797-ஆக உயா்ந்தது. இதுவரை 30,272 போ் குனமடைந்து வீடு திரும்பினா். தற்போது 318 போ் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் இதுவரை கரோனாவுக்கு 207 போ் பலியாகினா்.