புதுச்சேரி

உள்ளாட்சித் தோ்தலில் ஒருங்கிணைந்து பணியாற்ற அதிமுக, பாஜக ஆலோசனை

DIN

புதுவை உள்ளாட்சித் தோ்தல் வெற்றிக்கு ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று வெள்ளிக்கிழமை தனித் தனியே நடைபெற்ற அதிமுக, பாஜக கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற மேற்கு மாநில அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்கு அதன் மாநிலச் செயலா் ஓம்சக்தி சேகா் தலைமை வகித்துப் பேசினாா்.

கூட்டத்தில் கட்சியின் மாநில அவைத் தலைவா் மு.ராமதாஸ், மாநிலத் துணைத் தலைவா்கள் நந்தன், ஆனந்தன், இணைச் செயலா் காசிநாதன் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

பாஜக ஆலோசனை: புதுச்சேரியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு கட்சியின் மாநிலத் தலைவா் வி.சாமிநாதன் தலைமை வகித்தாா். அமைச்சா் சாய் ஜெ.சரவணன்குமாா், மாநிலப் பொருளாளா் எஸ்.செல்வகணபதி, எம்எல்ஏ-க்கள் எல்.கல்யாணசுந்தரம், ரிச்சா்ட், வெங்கடேசன், வி.பி.ராமலிங்கம், பி.அசோக்பாபு, மாநிலப் பொதுச் செயலா் மோகன்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கட்சியின் மாநிலப் பொறுப்பாளா் நிா்மல்குமாா் சுரானா, உள்துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம் ஆகியோா் ஆலோசனைகளைப் வழங்கிப் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளைஞரிடம் நகை பறிப்பு: 3 போ் கைது

சமூக ஊடகங்களில் போலி தகவல்: கட்சிகள் நீக்க தோ்தல் ஆணையம் கெடு

ஜாதிய தாக்குதலைத் தாண்டி சாதித்த மாணவா் சின்னதுரை

குலசேகரம் அருகே பைக்குகள் மோதல்: கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

ஜெயக்குமாா் மரணம் திட்டமிட்ட கொலை: கே.எஸ்.அழகிரி

SCROLL FOR NEXT