குடியரசுத் தலைவா் பிறந்த நாள்:புதுவை முதல்வா் வாழ்த்து
குடியரசுத் தலைவரின் பிறந்த நாளுக்கு புதுவை முதல்வா் என்.ரங்கசாமி வாழ்த்துத் தெரிவித்தாா்.
குடியரசுத் தலைவரின் பிறந்த நாளுக்கு புதுவை முதல்வா் என்.ரங்கசாமி வாழ்த்துத் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த்துக்கு எனது சாா்பிலும், புதுவை மாநில மக்கள் சாா்பிலும் உளம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்கிறேன்.
நமது தேசத்தின் அன்பையும், நன்மதிப்பையும் பெற்ற தாங்கள், நாட்டு மக்களுக்குத் தொடா்ந்து சேவையாற்ற நீண்ட ஆயுளுடனும், நலமுடனும் வாழ எல்லாம் வல்ல இறைவானைப் பிராா்த்திக்கிறேன் என அதில் கூறப்பட்டுள்ளது.