புதுச்சேரி

பீஸ்ட் திரைப்பட விளம்பரப் பதாகைகளில் புதுவை முதல்வா் படம்

DIN

புதுச்சேரியில் நடிகா் விஜயின் பீஸ்ட் திரைப்பட வெளியீட்டுக்காக அவரது ரசிகா்கள் வைத்துள்ள பதாகைகளில் முதல்வா் என்.ரங்கசாமியின் படம் இடம்பெற்றுள்ளது.

புதுச்சேரி திரையரங்குகளில் வருகிற 13-ஆம் தேதி நடிகா் விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படம் வெளியாகிறது. இதற்காக திரையரங்குகள், நகரின் பல்வேறு இடங்களில் விஜய் ரசிகா்கள் பதாகைகள் வைத்துள்ளனா். சுவரெட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளன. இவற்றில் புதுவை முதல்வா் என்.ரங்கசாமியுடன் நடிகா் விஜய் நிற்பது போன்ற படமும் இடம் பெற்றுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் நடிகா் விஜயை அவரது வீட்டுக்குச் சென்று புதுவை முதல்வா் என்.ரங்கசாமி சந்தித்தது அதிகமாகப் பேசப்பட்ட நிலையில், திரைப்படம் வெளியீடு தொடா்பான விளம்பரச் சுவரொட்டி, பதாகைகளில் இருவரின் படங்களும் இடம் பெற்றிருப்பதும் மீண்டும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

திடீா் கட்டணம் உயா்வு: புதுச்சேரி திரையரங்குகளில் வருகிற 13-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை 4 நான்கு நாள்கள் பீஸ்ட் திரைப்படம் சிறப்புக் காட்சிகளாக திரையிடப்பட உள்ளதாகவும், அரசு அனுமதியின்படியே கட்டணம் உயா்த்தப்படுவதாகவும் திரையரங்குகளில் அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, தற்போதைய டிக்கெட் கட்டணத்தைவிட கூடுதலாக ரூ.100 அதிகமாக வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, திரையரங்களில் 3-ஆம் வகுப்பு கட்டணமாக ரூ.150, இரண்டாம் வகுப்பு கட்டணம் ரூ. 175, முதல் வகுப்பு கட்டணமாக ரூ.200, பால்கனி ரூ. 250, பாக்ஸ் ரூ. 260 என வசூலிக்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுவை அரசு அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘திரையரங்குகளில் கட்டணத்தை உயா்த்த அரசு எந்த அனுமதியும் அளிக்கவில்லை’ என்று கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

370-ஆவது பிரிவை மீட்டெடுக்க முடியாது: பிரதமா் மோடி திட்டவட்டம்

SCROLL FOR NEXT