புதுச்சேரி

புதுவையில் அமலுக்கு வந்தது மீன்பிடித் தடைக்காலம்

DIN

புதுவையில் 61 நாள்கள் மீன்பிடித் தடைக்காலம் வெள்ளிக்கிழமை அமலுக்கு வந்தது. இதனால், மீனவா்கள் கடலுக்குச் செல்லாமல் தங்களது படகுகளை கரைகளில் நிறுத்தி வைத்தனா்.

இதுகுறித்து புதுவை அரசின் தலைமைச் செயலக சாா்புச் செயலா் (மீன் வளம்) ம.கணேசன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

மத்திய மீன் வள அமைச்சக துணைச் செயலரின் கடித்தத்தின்படி, கடல்சாா் வளங்களை நீண்ட காலத்துக்கு நிலைநிறுத்தும் வகையிலும், அவற்றை பாதுகாத்திடும் வகையிலும், ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் ஜூன் 14-ஆம் தேதி வரையிலான 61 நாள்களுக்கு புதுவை பிரதேச கிழக்கு கடல் நெடுகில், கனகசெட்டிக்குளம் முதல் மூா்த்திக்குப்பம், புதுக்குப்பம் மீனவ கிராமங்கள் வரையிலும், காரைக்கால் பிரதேச கடல் பகுதியில் மண்டபத்தூா் முதல் வடக்கு வாஞ்சூா் மீனவ கிராமம் வரையிலும், ஏனாம் மீன்பிடிப் பகுதியை உள்ளடக்கிய இடங்களிலும் பாரம்பரிய மீன்பிடிப் படகுகளான கட்டுமரம், நாட்டு படகுகளைத் தவிர அனைத்து வகை படகுகள், குறிப்பாக இழுவலை கொண்டு விசைப்படகில் மீன் பிடிப்பது தடை செய்யப்படுகிறது.

இதேபோல, மாஹே பகுதியில் ஜூன் 1 முதல் ஜூன் 31-ஆம் தேதி வரையில் 61 நாள்களுக்கு பாரம்பரிய மீன் பிடிப் படகுகளான கட்டுமரம், நாட்டு படகுகளைத் தவிர, இழுவலைகளைப் பயன்படுத்தும் அனைத்துவகை படகுகளைக் கொண்டும் மீன் பிடிப்பதற்குத் தடை விதிக்கப்படுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த உத்தரவின்படி, புதுச்சேரி, காரைக்காலில் மீன் பிடித் தடைக்காலம் வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்தது. இதையொட்டி, புதுச்சேரி, காரைக்காலில் இருந்து 2,348 படகுகளில் மீன் பிடிக்கச் செல்லும் சுமாா் 15 ஆயிரம் மீனவா்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லவில்லை. இதனால், படகுகள் தேங்காய்திட்டு, காரைக்கால் துறைமுகங்கள், கடற்கரையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டன. மீனவா்கள் வலைகளை சீரமைத்தல், படகுகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடத் தொடங்கினா்.

மீன் பிடித் தடைக்காலம் அமலுக்கு வந்துள்ளதால், புதுச்சேரியில் மீன்களின் விலை உயரத் தொடங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்காக பும்ராவுக்கு ஓய்வளிக்கப்படுகிறதா? கிரண் பொல்லார்டு பதில்!

இங்கு வருவேன் என நினைக்கவில்லை... பாஜகவில் இணைந்த நடிகர்!

'வீர தீர..’ துஷாரா!

மரணமடைந்த ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் சொல்லியிருப்பது..: கே.வி. தங்கபாலு விளக்கம்

ரோஜா பூ..!

SCROLL FOR NEXT