புதுச்சேரி

தமிழ் வளா்ச்சித் துறை அமைக்கக் கோரி உண்ணாவிரதம்

DIN

தமிழ் வளா்ச்சித் துறையை அமைக்கக் கோரி, புதுச்சேரியில் சிந்தனையாளா்கள் பேரவை, மன்னா் மன்னன் படைப்பாளா்கள் அறக்கட்டளை சாா்பில் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதம் நடைபெற்றது.

புதுச்சேரி சுதேசி ஆலை அருகே நடைபெற்ற உண்ணாவிரதத்துக்கு பாரதிதாசனின் பேரன் கோ.செல்வம் தலைமை வகித்தாா். போராட்டக் குழுத் தலைவா் கோ.கலியபெருமாள், வைத்தியநாதன் எம்எல்ஏ மற்றும் எழுத்தாளா்கள், கவிஞா்கள், கல்வியாளா்கள், தமிழறிஞா்கள் திரளாகப் பங்கேற்றனா்.

புதுவையில் தமிழ் வளா்ச்சித் துறையை அமைக்க வேண்டும்; அனைத்து தமிழ் விருதுகளையும் முறைப்படி வழங்க வேண்டும்; படைப்பாளா்களுக்கு ஊக்கத் திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

முன்னதாக, உண்ணாவிரத அரங்கில் பாரதிதாசனின் பிறந்த நாளையொட்டி அவரது உருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT