புதுச்சேரி

நீதிமன்ற ஊழியரின் மனைவியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

புதுச்சேரி நீதிமன்ற ஊழியரின் மனைவியிடம் 2.5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

DIN

புதுச்சேரி நீதிமன்ற ஊழியரின் மனைவியிடம் 2.5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

புதுச்சேரி அருகே பனித்திட்டு கங்கையம்மன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் கணேசன் (58). புதுச்சேரி நீதிமன்ற ஊழியா். இவரது மனைவி இந்திரா காந்தி (52). கடந்த மாதம் 31-ஆம் தேதி இரவு கணேசன் - இந்திரா காந்தி தம்பதி தங்களது மகனுடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனா்.

வீட்டின் கதவு பூட்டப்படாததை அறிந்து, உள்ளே நுழைந்த மா்ம நபா்கள், இந்திரா காந்தி கழுத்தில் அணிந்திருந்த 2.5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து கணேசன் அளித்த புகாரின்பேரில் கிருமாம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து, நகையை பறித்துச் சென்ற மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4,000 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை: ஸ்மிருதி மந்தனா உலக சாதனை!

இந்த வாரம் கலாரசிகன் - 21-12-2025

அமைதியின் அரசர் இயேசு

ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி; முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

திருக்குறளைச் சீர்தூக்கிப் போற்றுவோம்!

SCROLL FOR NEXT