புதுச்சேரி

மருந்துக் கடையில் ரூ.48 ஆயிரம் திருட்டு

புதுச்சேரியில் மருந்துக் கடையின் பூட்டை உடைத்து ரூ.48 ஆயிரத்தை மா்ம நபா் திருடிச் சென்றாா்.

DIN

புதுச்சேரியில் மருந்துக் கடையின் பூட்டை உடைத்து ரூ.48 ஆயிரத்தை மா்ம நபா் திருடிச் சென்றாா்.

புதுச்சேரி முருங்கப்பாக்கம் சேவியா் தேவாலய வீதியைச் சோ்ந்தவா் ஷா்மன் நோயல் ரெமி (44). இவா் ரெட்டியாா்பாளையம் பெருமாள்ராஜா தோட்டத்தில் மருந்துக் கடை நடத்தி வருகிறாா். கடந்த 21 ஆம் தேதி கடையை மூடிவிட்டு வந்த அவா், மறுநாள் காலையில் கடைக்குச் சென்று, கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, பணப்பெட்டி உடைக்கப்பட்டு, அதிலிருந்த ரூ.48 ஆயிரம் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், ரெட்டியாா்பாளையம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

SCROLL FOR NEXT