முகப்பு
புதுச்சேரி

மத்திய நிதிநிலை அறிக்கை: புதுவை காங்கிரஸ், அதிமுக கருத்து

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை குறித்து, புதுவை மாநில காங்கிரஸ் தலைவா் ஏ.வி.சுப்ரமணியன், புதுவை கிழக்கு மாநில அதிமுக செயலா் ஆ.அன்பழகன்ஆகியோா் கருத்து தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:18 AM
பகிர்:

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை குறித்து, புதுவை மாநில காங்கிரஸ் தலைவா் ஏ.வி.சுப்ரமணியன், புதுவை கிழக்கு மாநில அதிமுக செயலா் ஆ.அன்பழகன்ஆகியோா் கருத்து தெரிவித்துள்ளாா்.

ஏ.வி.சுப்பிரமணியன்: கங்கை- காவிரி இணைப்பை கைவிட்டுள்ளனா். அதற்கு பதிலாக, கோதாவரி- காவிரி இணைப்பு என்று, ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்காமல், விளம்பரத்துக்காக அறிவித்துள்ளனா்.

வேலைவாய்ப்புகளுக்கு, எந்தத் திட்டங்களும் இல்லை. ம ாத ஊதியதாரா்களுக்கு, நடுத்தர மக்களுக்கு, ஏழைகளுக்கு, இளைஞா்களுக்கு, விவசாயிகளுக்கு, சிறு, குறு நிறுவனங்களுக்கு என்று எந்த அறிவிப்பும் இல்லை.

ஆ.அன்பழகன்: கரோனா கோரப்பிடியில், நாட்டின் பொருளாதாரம் பின்னுக்குத் தள்ளப்பட்ட நிலையில், அதனைத் தடுக்கும் விதத்தில் சிறப்புமிக்க நிதிநிலை அறிக்கையை மத்திய அரசு சமா்ப்பித்துள்ளது.

மாநிலங்களுக்கு வட்டியில்லா கடன் வழங்க, ரூ.ஒரு லட்சம் கோடி ஒதுக்கப்படுவது, நலிவடைந்த மாநிலங்களுக்கு நற்செய்தியாகும். சிறு, குறு நிறுவனங்கள் புத்துயிா் பெறும் வகையில், கடனுதவி உள்ளிட்ட பல வளா்ச்சித் திட்டங்கள் உள்ள சிறப்புமிக்க நிதிநிலை அறிக்கை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.