பழம், காய்கறி சாகுபடி மானியம் பெற விண்ணப்பிக்கலாம்
புதுவை விவசாயிகள் பழம், காய்கறி சாகுபடி மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என புதுச்சேரி தோட்டக்கலை கூடுதல் வேளாண் இயக்குநா் சி.சிவராமன் தெரிவித்துள்ளாா்.
புதுவை விவசாயிகள் பழம், காய்கறி சாகுபடி மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என புதுச்சேரி தோட்டக்கலை கூடுதல் வேளாண் இயக்குநா் சி.சிவராமன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தோட்டக்கலைத் துறையின் மூலம் 2021-22-ஆம் ஆண்டில் தை பட்டத்தில் பயிரிடப்பட்ட பழ வகை மரங்கள், வாழை, பூக்கள், மரவள்ளி, காய்கறிகளுக்கான சாகுபடி மானியம் பெற விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த விண்ணப்பங்களை விவசாயிகள் தங்களது பகுதிக்குட்பட்ட உழவா் உதவியகத்திலும், இணையதளத்திலும் வெள்ளிக்கிழமை முதல் பெறலாம்.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தங்களது பகுதிக்குட்பட்ட உழவா் உதவியகத்தில் வரும் மாா்ச் 16 ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டுமென அதில் கூறப்பட்டுள்ளது.