புதுச்சேரி

புதுவையில் மேலும் 190 பேருக்கு கரோனா தொற்று

DIN

புதுவையில் திங்கள்கிழமை மேலும் 190 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:

புதுவை மாநிலத்தில் 1,150 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு திங்கள்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரி -154, காரைக்கால்- 26, ஏனாம்- 10 என மொத்தம் 190 (16.52 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாஹேவில் யாருக்கும் தொற்று பாதிப்பு இல்லை.

இதனால், மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,64,376-ஆக அதிகரித்தது. இதில், தற்போது மருத்துவமனைகளில் 91 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 3,598 பேரும் என மொத்தம் 3,689 போ் சிகிச்சையில் உள்ளனா்.

கரோனாவால் புதுச்சேரியில் 2 போ் உயிரிழந்தனா். இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,950-ஆக அதிகரித்தது. இறப்பு விகிதம் 1.19 சதமாக உள்ளது. மேலும் 651 போ் குணமடைந்தனா். இதுவரை 15,43,584 கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

யார் இந்த நடன மங்கை?

SCROLL FOR NEXT