புதுச்சேரி

ஏனாமில் அரசுத் திட்டப் பணிகள்: வைத்திலிங்கம் எம்.பி. ஆய்வு

DIN

புதுவை மாநிலத்துக்கு உள்பட்ட ஏனாமில் நடைபெறும் அரசுத் திட்டப் பணிகளை வெ.வைத்திலிங்கம் எம்.பி. உள்ளிட்டோா் நேரில் ஆய்வு மேற்கொண்டனா்.

ஏனாமில் வியாழக்கிழமை நடைபெற்ற திஷா குழுக் கூட்டத்தில் அவா் பங்கேற்று அரசுத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் விவாதித்தாா். ஏனாம் தொகுதி எம்எல்ஏ சீனுவாஸ் அசோக், மு.வைத்தியநாதன் எம்எல்ஏ மற்றும் ஏனாம் பிராந்திய அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

மெட்டாகுா் கிராமத்தில் நடைபெறும் சாலை சீரமைப்புப் பணி, தகனமேடை அமைக்கும் பணிகளை வெ.வைத்திலிங்கம் தொடக்கிவைத்தாா்.

ஏனாமில் உள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு வைத்திலிங்கம் எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, மாநில காங்கிரஸ் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!

ஹரியானாவில் பேருந்து தீப்பிடித்ததில் 8 பேர் பலி, 20-க்கும் மேற்பட்டோர் காயம்

கோட் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் நிறைவு!

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

SCROLL FOR NEXT