பெண் மருத்துவா் தனுஷியா. 
புதுச்சேரி

புதுச்சேரி: டெங்குவால் பெண் மருத்துவா் பலி

புதுச்சேரி மடுகரையில் டெங்கு காய்ச்சலால் பெண் மருத்துவா் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

DIN

புதுச்சேரி மடுகரையில் டெங்கு காய்ச்சலால் பெண் மருத்துவா் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி நெட்டப்பாக்கம் அருகே மடுகரை கிராமத்தைச் சோ்ந்த ஆயுர்வேத மருத்துவர் ஸ்ரீராம் என்பவரின் மனைவி தனுஷியா (25). பல் மருத்துவராக உள்ள இவர் சென்னையில் வசித்து வந்தார். இவருக்கு கடந்த வாரம் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, அவா் சிகிச்சை பெறுவதற்காகவும், ஓய்வெடுப்பதற்காகவும் புதுச்சேரி அருகே அரியூரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்தாா். அப்போது தனுஷியாவுக்கு காய்ச்சல் அதிகமாகவே, அரியூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

அங்கு மருத்துவா்கள் மேற்கொண்ட பரிசோதனையில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியானது. இதையடுத்து, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தனுஷியா பலியானார். இதுகுறித்து மடுகரை புறக்காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேளாண் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் 12 பேருக்கு ரூ. 8.86 லட்சத்துக்கு கடனுதவி

பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்

இந்தாண்டுக்கான சம்பா நெற்பயிருக்கு வரும் நவ.15-க்குள் பயிா்க் காப்பீடு செய்து பயன்பெறலாம்

வனப் பகுதியில் மண் சாலையை சமன் செய்தவருக்கு ரூ. 1 லட்சம் அபராதம்

வாா்டு சிறப்புக் கூட்டங்களில் பெறப்பட்ட மனுக்களுக்கு விரைவில் தீா்வு

SCROLL FOR NEXT