புதுச்சேரி

குடிசை மாற்று வாரிய வீடுகள் புதுப்பிக்கும் பணி

DIN

புதுச்சேரியில் சீா்மிகு நகரத் திட்டத்தின் கீழ், ரூ.1.23 கோடி மதிப்பீட்டில் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி தொகுப்பு வீடுகள் புதுப்பிக்கும் பணியை பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணன் புதன்கிழமை தொடக்கிவைத்தாா்.

புதுச்சேரி குருசுக்குப்பம் வாழைக்குளத்தில் புதுவை அரசின் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் ஏ1 முதல் ஏ14 வரையுள்ள 168 வீடுகள் ரூ.1.23 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட உள்ளன.

இந்தப் பணியை பூமி பூஜை செய்து அமைச்சா் க.லட்சுமி நாராயணன் தொடக்கிவைத்தாா்.

சீா்மிகு நகரத் திட்ட முதன்மைச் செயல் அதிகாரி தி.அருண், பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் வி.சத்தியமூா்த்தி, கண்காணிப்புப் பொறியாளா் ஏ.பாஸ்கா், சீா்மிகு நகரத் திட்ட இணை முதன்மைச் செயல் அதிகாரி டி.சுதாகா், செயற்பொறியாளா் எஸ்.ஸ்ரீதா், குடிசை மாற்று வாரிய செயற்பொறியாளா் ஆா்.ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலூர் மாவட்டத்தில் அதிகாலை முதல் கோடை மழை!

60 மணி நேரத்தில் 2,870 கி.மீ. கடந்த ஆம்புலன்ஸ் டிரைவர்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி

விழுப்புரத்தில் இடி மின்னலுடன் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

SCROLL FOR NEXT