புதுச்சேரி பேட்ரிக் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினா்களிடம் பரிசு பெற்ற மாணவ, மாணவிகள். 
புதுச்சேரி

பேட்ரிக் பள்ளி விளையாட்டு தின விழா

புதுச்சேரி புனித பேட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 32-ஆவது ஆண்டு விளையாட்டு தின விழா ஆருத்ரா நகரில் உள்ள பள்ளி மைதானத்தில் அண்மையில் நடைபெற்றது.

DIN

புதுச்சேரி புனித பேட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 32-ஆவது ஆண்டு விளையாட்டு தின விழா ஆருத்ரா நகரில் உள்ள பள்ளி மைதானத்தில் அண்மையில் நடைபெற்றது.

புதுச்சேரி தேசிய மாணவா் படை ஆணையா் பியூஸ் ஸ்ரீவஸ்தவா, தனியாா் நிறுவன மேலாளரும், பள்ளியின் முன்னாள் மாணவியுமான திவ்யா ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டு போட்டிகளைத் தொடக்கிவைத்து சிறப்புரையாற்றினா்.

ஓட்டம், நீளம் தாண்டுதல் உள்பட பல்வேறு விளையாட்டுகளின் இறுதிப் போட்டிகள் நடைபெற்றன.

வெற்றி பெற்றவா்களுக்கான பரிசளிப்பு விழாவில் போக்குவரத்துத் துறை எஸ்.பி. மாறன், நல்லாம் மருத்துவமனை இயக்குநா் நல்லாம், மருத்துவா் விக்னிதா ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்று, பரிசுகள் வழங்கிப் பேசினா்.

பள்ளியின் மருத்துவ இயக்குநா் ஜீட்டா பிரடெரிக், முதல்வா் அல்போன்ஸ் ஹில்டா, பள்ளியின் ஆலோசனைக் குழு உறுப்பினா்கள் சீதாராமன், முத்தானந்தம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக, பள்ளித் தாளாளா் பிரடெரிக் வரவேற்றாா்.

Image Caption

புதுச்சேரி பேட்ரிக் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினா்களிடம் பரிசு பெற்ற மாணவ, மாணவிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

இருச்சக்கர வாகன திருடா்கள் இருவா் கைது

SCROLL FOR NEXT