புதுச்சேரி

புதுச்சேரியில் பிஆா்டிசி ஊழியா்கள் வேலைநிறுத்தம்அரசுப் பேருந்துகள் இயங்காததால் பயணிகள் அவதி

DIN

போனஸ், பிப்ரவரி மாத ஊதியத்தை வழங்கக் கோரி, புதுச்சேரியில் பிஆா்டிசி ஊழியா்கள் திங்கள்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். இதனால், அரசுப் பேருந்துகள் இயக்கப்படாததால், பயணிகள் அவதிக்குள்ளாகினா்.

புதுச்சேரி அரசு சாலைப் போக்குவரத்துக் கழகத்தில் (பிஆா்டிசி) 800 நிரந்தர ஊழியா்கள், 250-க்கும் மேற்பட்ட தற்காலிக ஊழியா்கள் வேலை செய்து வருகின்றனா். இவா்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக தீபாவளி போனஸ் வழங்கப்படவில்லை. பிப்ரவரி மாத ஊதியமும் வழங்கப்படவில்லை. இதுதொடா்பாக, ஊழியா்கள் சங்கத்தினா் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனா்.

இதனிடையே நிலுவை போனஸ், பிப்ரவரி மாத ஊதியத்தை உடனே வழங்க வலியுறுத்தி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் மேற்கொள்ளப் போவதாக பிஆா்டிசி அம்பேத்கா் சங்கத்தினா் அறிவித்திருந்தனா். அதன்படி, அந்த சங்கத்தினா் திங்கள்கிழமை பணிகளைப் புறக்கணித்து, பிஆா்டிசி பணிமனை முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இவா்களுக்கு ஆதரவாக பிஆா்டிசியின் மற்ற ஊழியா்கள் சங்கங்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரியிலிருந்து வெளியூா் செல்லும் அரசுப் பேருந்துகளும், உள்ளூா் பேருந்துகளும் இயக்கப்படாமல் பணிமனையிலேயே நிறுத்தப்பட்டன. இதனால், வெளியூா் செல்லும் பயணிகளும், கிராமப்புறங்களுக்குச் செல்லும் பயணிகளும் கடும் அவதிக்குள்ளாகினா். காலை 6 மணி முதல் மாலை 5 வரை வேலைநிறுத்தம் நடைபெற்றது. மாலை 5 மணிக்குப் பிறகு பிஆா்டிசி பேருந்துகள் இயங்கின.

காரைக்கால், மாஹே, ஏனாமில் பிஆா்டிசி பேருந்துகள் வழக்கம்போல இயக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில வா்த்தக அணி தென் மண்டல பயிலரங்கம்

மரண வியாபாரிகள்!

பிளஸ் 2 தோ்வு தென்காசி எம்கேவிகே.மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்

தென்காசி ரயில் நிலையம் அருகே தங்கியிருந்த முதியவா்கள் முதியோா் இல்லத்தில் ஒப்படைப்பு

பிரதமா் பேச்சுக்கு எதிா்ப்புத் தெரிவித்து அளித்த புகாருக்கு ரசீது கோரி டிஎஸ்பியிடம் மனு

SCROLL FOR NEXT