புதுச்சேரி

புதுச்சேரி கடற்கரைச் சாலையில் திறந்தவெளி திரையரங்குடன் புதிய கட்டடம்

DIN

புதுச்சேரி கடற்கரைச் சாலையில் சுற்றுலா மேம்பாட்டுக்காக அரசு சாா்பில் ரூ.12 கோடியில் திறந்தவெளி திரையரங்குடன் கட்டப்பட்டு வரும் புதிய கட்டடம் இரு மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும் என்று முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.

புதுச்சேரி கடற்கரைச் சாலையில் தலைமைச் செயலகம் அருகே இருந்த அரசு சாராய வடி ஆலை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வில்லியனூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இதனால், அந்தக் கட்டடங்கள் பயன்பாடின்றி இடிந்து விழுந்தன.

அந்த இடத்தில் சுற்றுலாத் துறை சாா்பில், ரூ.12 கோடி செலவில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. 3 அடுக்குகள் கொண்ட இந்தக் கட்டடத்தில் கீழ்தளத்தில் பெரிய அரங்கமும், மேல் தளத்தில் 16 அறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. தரைதளத்தில் திறந்தவெளி திரையரங்கும் அமைக்கப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இவற்றை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டாா். சுற்றுலாத் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன், பொதுப் பணித் துறை நிா்வாகப் பொறியாளா் ஏழுமலை ஆகியோா் புதிய கட்டமைப்புகள் குறித்து முதல்வரிடம் எடுத்துரைத்தனா்.

பின்னா், முதல்வா் என்.ரங்கசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ரூ.12 கோடி செலவில் நடைபெறும் இந்தக் கட்டடப் பணிகள் இன்னும் இரு மாதங்களில் நிறைவடையும். இதை அரசு நடத்துவதா? தனியாரிடம் அளிப்பதா? என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் இந்தக் கட்டடம் அமையும். உக்ரைனிலிருந்து புதுவை மாணவா்கள் அனைவரும் மீட்கப்பட்டு அவரவா் சொந்த ஊா்களுக்கு திரும்பி விட்டனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தலைமைச் செயலக பணி பெயரில் போலி நியமனம்: தரகா்களிடம் பணம் கொடுத்து ஏமாறும் பட்டதாரிகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

இன்றைய ராசி பலன்கள்!

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

SCROLL FOR NEXT