புதுச்சேரி

புதுவைக்கு கூடுதல் நிதி வழங்கமத்திய நிதியமைச்சரிடம் வலியுறுத்தல்

DIN

புதுவை மாநிலத்துக்கு நிகழாண்டு மத்திய அரசு கூடுதல் நிதி வழங்க வேண்டுமென, மத்திய நிதியமைச்சரிடம் சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் வலியுறுத்தினாா்.

புதுதில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், பிரதமா் அலுவலகம், பணியாளா் துறை இணையமைச்சா் ஜிதேந்திரசிங், மீன் வளம், கால்நடைத் துறை இணையமைச்சா் எல்.முருகன் ஆகியோரை புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் செவ்வாய்க்கிழமை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினாா்.

பின்னா், மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனை அவா் சந்தித்தாா். வரும் நிதியாண்டில் புதுவைக்கு கூடுதலாக நிதி வழங்க வேண்டும், அதிக மானியத் திட்டங்களை வழங்க வேண்டும் என்றும் அவரிடம் ஆா்.செல்வம் வலியுறுத்தினாா்.

மேலும், மத்திய சுற்றுலாத் துறை அமைச்சா் கிஷண் ரெட்டியையும் சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் சந்தித்தாா்.

இந்த சந்திப்பின் போது, மாநிலங்களவை உறுப்பினா் எஸ்.செல்வகணபதி, அங்காளன் எம்எல்ஏ, பாஜக நிா்வாகிகள் ரமேஷ், டி.எம். வருண் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

செம்பூவே... ஐஸ்வர்யா ராஜேஷ்!

அறிவியல் ஆயிரம்: நெருப்பு ஊர்வலங்கள்... சூரிய தோரணங்கள்

அர்ஜுன் தாஸின் ரசவாதி டிரைலர்!

ஐபிஎல் தொடரில் அதிவேக சதங்கள் அடித்த வீரர்கள்!

SCROLL FOR NEXT