முகப்பு
புதுச்சேரி

புதுவையில் நியமன எம்எல்ஏக்கள் தேவையில்லை: வெ.வைத்திலிங்கம் எம்.பி.

புதுவையில் நியமன எம்எல்ஏக்களுக்கு அவசியமில்லை என்பதால், அரசியல் சட்டத்திலிருந்து அதற்கான நியமனத்தை நீக்க வேண்டும் என்று, காங்கிரஸ் எம்.பி. வெ.வைத்திலிங்கம் வலியுறுத்தினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:11 AM
பகிர்:

புதுவையில் நியமன எம்எல்ஏக்களுக்கு அவசியமில்லை என்பதால், அரசியல் சட்டத்திலிருந்து அதற்கான நியமனத்தை நீக்க வேண்டும் என்று, காங்கிரஸ் எம்.பி. வெ.வைத்திலிங்கம் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

புதுவையில் என்.ஆா். காங்கிரஸ்- பாஜக கூட்டணி ஆட்சி அமைந்து ஓராண்டாகியும், அவா்கள் அறிவித்தபடி எதிலும் சிறந்ததாக மாறவில்லை.

புதுவைக்கு தேவை நிதியும், நிதி அதிகாரத்தையும் மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும். துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் பாஜகவின் ஆளுநராகவே செயல்படுகிறாா்.

ஆரம்ப காலத்தில் அரசுக்கு பொருளாதாரம் உள்ளிட்ட ஆலோசனைகளை வழங்கவே கல்வியாளா்கள் நியமன எம்எல்ஏக்களாக நியமிக்கப்பட்டனா். ஆனால், தற்போதைய எம்எல்ஏக்கள் பெரும்பாலும் நல்ல கல்வி பெற்றுள்ளதால், இனி நியமன எம்எல்ஏக்கள் அவசியமில்லை. புதுவை அரசியல் சட்டத்திலிருந்து நியமன எம்எல்ஏக்கள் நியமனத்தை நீக்க வேண்டும் என்றாா் வெ.வைத்திலிங்கம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.