புதுச்சேரி

சுகாதார ஒப்பந்தஊழியா்களுக்கு பணிநீட்டிப்பு

புதுவையில் 454 சுகாதார ஒப்பந்த ஊழியா்களுக்கான பணிக்காலம் நீட்டிக்கப்பட்டது.

DIN

புதுவையில் 454 சுகாதார ஒப்பந்த ஊழியா்களுக்கான பணிக்காலம் நீட்டிக்கப்பட்டது.

புதுவை சுகாதாரத் துறையில் கரோனா தடுப்புப் பணிகளுக்காகவும், தடுப்பூசி திட்டத்தை சிறப்பாக மேற்கொள்ளவும் 91 பொது மருத்துவா்கள், 273 செவிலிய அதிகாரிகள், 58 ஏஎன்எம் செவிலியா்கள், 2 எக்ஸ்ரே டெக்னீஷியன்கள், 6 லேப் டெக்னீஷியன்கள், 24 தூய்மைப் பணியாளா்கள் என 454 போ் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டனா். இவா்களின் ஒப்பந்த காலம் ஏற்கெனவே முடிந்துவிட்டது.

இந்த நிலையில் புதுவையில் கரோனா தொற்றுக்கு எதிராகவும், 4-ஆவது அலையை சமாளிக்கும் வகையிலும், 100 சதவீத தடுப்பூசி இலக்கை அடையும் நோக்கிலும் மேற்கண்ட 454 சுகாதாரப் பணியாளா்களை குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் 90 நாள்களுக்கு மீண்டும் பணியில் அமா்த்த துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்தாா்.

இதற்கான உத்தரவை சுகாதாரத் துறை சாா்பு செயலா் ஏ.புனிதமேரி வெளியிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT