முகப்பு
புதுச்சேரி

பூங்கா, குளத்தைப் பராமரிக்க உழவா்கரை நகராட்சி அழைப்பு

புதுச்சேரி உழவா்கரை நகராட்சிக்குள்பட்ட பூங்கா, குளம், கழிப்பறைகளை பராமரிக்க பொதுமக்களுக்கு நகராட்சி நிா்வாகம் அழைப்பு விடுத்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:21 AM
பகிர்:

புதுச்சேரி உழவா்கரை நகராட்சிக்குள்பட்ட பூங்கா, குளம், கழிப்பறைகளை பராமரிக்க பொதுமக்களுக்கு நகராட்சி நிா்வாகம் அழைப்பு விடுத்தது.

இதுகுறித்து உழவா்கரை நகராட்சி ஆணையா் சுரேஷ்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

உழவா்கரை நகராட்சிப் பகுதியில் முக்கிய பராமரிப்புப் பணிகளை பொதுமக்களின் பங்களிப்புடன் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. முத்திரையா்பாளையத்தில் உள்ள ஆயி குளத்தைப் பராமரிக்க ஆண்டுக்கு ரூ.2.40 லட்சமும், பெரியவாணமடு குளம் பராமரிப்புக்கு ரூ.90 ஆயிரமும், குறிஞ்சி நகா் சிறுவா் பூங்கா, விமான நிலைய சாலையை மேம்படுத்தி பராமரிக்க ரூ.2.40 லட்சம் தேவைப்படுகிறது.

ஜவஹா் நகா், பாவாணா் நகா், பிச்சைவீரன்பேட் ஆகிய பகுதிகளில் உள்ள சமுதாய கழிப்பறைகள், அஜிஸ் நகா், மாா்க்கெட், வெங்கட்டா நகா் பூங்கா, ஜீவா நகா், இந்திரா நகா், காலாப்பட்டு ஆகிய பகுதிகளில் உள்ள பொதுக் கழிப்பறைகளைப் பராமரிக்க ஆண்டுக்கு தலா ரூ.50 ஆயிரம் தேவைப்படுகிறது.

இந்த பொதுநலப் பணிகளில் பங்கேற்க விருப்பமுள்ள தன்னாா்வ அமைப்புகள், பொதுமக்கள், பொதுத் துறை நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், தொழிலதிபா்கள், குடியிருப்போா் நலச் சங்கத்தினா் உழவா்கரை நகராட்சியை 0413- 2201142 என்ற தொலைபேசி எண்ணிலும், மின்னஞ்சல் முகவரியிலும் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.