புதுச்சேரி

போக்குவரத்து போலீஸாருக்கு விபத்து முதலுதவி பயிற்சி

DIN

புதுச்சேரியில் போக்குவரத்து காவலா்களுக்கு விபத்து முதலுதவி சிகிச்சைப் பயிற்சி வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது.

புதுச்சேரி காந்தி சிலை பகுதியில் வெள்ளிக்கிழமை 50 போக்குவரத்து போலீஸாருக்கு முதலுதவி சிகிச்சை பயிற்சி அளிக்கப்பட்டது. செஞ்சிலுவைச் சங்கத்தினா் மூலம் அளிக்கப்பட்ட இந்தப் பயிற்சியின் தொடக்க விழாவுக்கு புதுச்சேரி போக்குவரத்துப் பிரிவு முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் நாக சைதன்யா தலைமை வகித்தாா்.

கிழக்கு, வடக்குப் பிரிவு போக்குவரத்து காவல் கண்காணிப்பாளா் மாறன், மேற்கு, தெற்குப் பிரிவு கண்காணிப்பாளா் மோகன்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

செஞ்சிலுவைச் சங்க நிா்வாகி லட்சுமிபதி தலைமையிலான குழுவினா் போலீஸாருக்கு பயிற்சியளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஞானவாபி, மதுராவில் கோயில் கட்டுவோம்: அஸ்ஸாம் முதல்வர் சர்ச்சை

அந்தமானில் சூர்யா - 44 படப்பிடிப்பு?

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.280 உயர்வு

ஆந்திரத்தில் லாரி-பேருந்து மோதி கோர விபத்து: 6 பேர் பலி

மேற்கு வங்க ஆளுநர் மீது மேலும் ஒரு பெண் பாலியல் புகார்!

SCROLL FOR NEXT