புதுச்சேரி

புகழ்பெற்ற வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் தெப்பத் திருவிழா

DIN

நீடாமங்கலம்: வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் ஆவணி ஞாயிறு தெப்பத் திருவிழா நடைபெற்றது.

இக்கோயிலில் உள்ள அம்மனை சீதளாதேவி எனவும் அழைப்பர். இக்கோயிலில் பங்குனிப் பெருவிழாவில் நடைபெறும் பாடைக்காவடி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம். சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் ஆவணி ஞாயிறு விழா நடைபெற்றது. 

செப்டம்பர் 11 ஆம்தேதி ஆவணி ஞாயிறன்று தெப்பத் திருவிழா நடைபெற்றது. இதனைமுன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரமும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பகல் 1 மணிக்கு அம்மன் வெள்ளி வாகனத்தில் திருவீதியுலாக்காட்சியும் நடந்தது. இரவு மகாமாரியம்மன் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் நடந்த தெப்பத் திருவிழாவில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த மகாமாரியம்மன்.

தெப்ப பவனியில் எஸ்.ஏ.எஸ்.சந்திரசேகரன், ஆலங்குடி ஏ.வி.என்.பாலமுருகன் குழுவினரின் நாதஸ்வர இன்னிசைக் கச்சேரியும் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் மு.கருணாநிதி, செயல் அலுவலர் ஆ.ரமேஷ் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை வலங்கைமான் காவல் துறையினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனம் மயக்கும் ரீனா கிருஷ்ணா - புகைப்படங்கள்

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஷிவம் துபே இடம் பிடித்தது எப்படி?

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

SCROLL FOR NEXT