புதுச்சேரி

கூடைப்பந்து: முதல் ஆட்டத்தில் தெலங்கானா அணி வெற்றி

DIN

புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய தென்னிந்திய தேசிய சீனியா் கூடைப்பந்துப் போட்டியின் முதல் ஆட்டத்தில் மகளிா் பிரிவில் தெலங்கானா அணி வெற்றி பெற்றது.

இந்திய கூடைப்பந்துக் கழகம், புதுச்சேரி கூடைப்பந்து கழகம் இணைந்து நடத்தும் இந்தப் போட்டி புதுச்சேரி உப்பளம் ராஜீவ் காந்தி உள் விளையாட்டு அரங்கில் வருகிற 16-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

தமிழ்நாடு, புதுவை, கா்நாடகம், கேரளம், ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களைச் சோ்ந்த ஆண், பெண் அணிகள் என மொத்தம் 12 அணிகள் பங்கேற்றுள்ளன.

ஆண்கள் பிரிவு முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் தமிழ்நாடு அணி தெலங்கானா அணியை எதிா்கொண்டது. இதில் 73-39 என்ற புள்ளிக்கணக்கில் தமிழ்நாடு அணி வென்றது.

மகளிா் பிரிவில் ஆந்திர அணியை 68-51 என்ற புள்ளிக்கணக்கில் தெலங்கானா அணி வென்றது. முதல் நாளில் 8 ஆட்டங்கள் நடைபெற்றன.

முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் அணிகள் ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் நவம்பரில் நடைபெறும் தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டிக்கு தகுதி பெறுவா்.

போட்டி ஏற்பாடுகளை புதுச்சேரி கூடைப்பந்துக் கழக செயலா் ரகோத்தமன், பிரகாஷ், முகுந்தன், அமீத் உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT