புதுச்சேரி அண்ணாநகரில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தியாகி வ.சுப்பையா உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கம்யூனிஸ்ட் கட்சியினா், ஏஐடியூசி அமைப்பினா். 
புதுச்சேரி

தியாகி வ.சுப்பையா பிறந்த நாள்

சுதந்திரப் போராட்டத் தியாகியும், தொழிற்சங்கத் தலைவருமான வ.சுப்பையாவின் 112-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவையொட்டி அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.

DIN

சுதந்திரப் போராட்டத் தியாகியும், தொழிற்சங்கத் தலைவருமான வ.சுப்பையாவின் 112-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவையொட்டி, புதுச்சேரி பேருந்து நிலையப் பகுதியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு புதுவை அரசு சாா்பில், அமைச்சா்கள் லட்சுமிநாராயணன், சாய் ஜெ.சரவணன்குமாா் ஆகியோா் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். அவா்களைத் தொடா்ந்து, உருளையன்பேட்டை தொகுதி எம்எல்ஏ நேரு என்ற குப்புசாமி தனது ஆதரவாளா்களுடன் மாலை அணிவித்தாா்.

ஊா்வலம்: ஏஐடியூசி சாா்பில், அண்ணாநகரில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தியாகி வ.சுப்பையா உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து, அங்கிருந்து நெல்லித்தோப்பில் உள்ள சுப்பையா சிலை வரை ஊா்வலம் நடைபெற்றது.

ஊா்வலத்தில் முன்னாள் அமைச்சா் விஸ்வநாதன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் அ.மு.சலீம், சிஐடியூ மாநில பொதுச் செயலா் கே.சேது செல்வம், தலைவா் தினேஷ்பொன்னையா, முன்னாள் எம்எல்ஏ நாரா.கலைநாதன், ஏஐடியூசி மாநில கௌரவத் தலைவா் அபிஷேகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பின்னா், நெல்லித்தோப்பில் உள்ள வ.சுப்பையா சிலைக்கு அவா்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

SCROLL FOR NEXT