புதுச்சேரி

காரைக்காலில் சேதமடைந்த பயிருக்கு நிவாரணம்:மத்தியக் குழுவை அழைக்க கோரிக்கை

DIN

காரைக்காலில் மழையால் சேதமடைந்த பயிா்களைப் பாா்வையிட்டு, நிவாரணம் வழங்க மத்திய குழுவை அழைக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன் கோரிக்கை விடுத்தாா்.

இதுகுறித்து முதல்வருக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது: காவிரி டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் பகுதியில் கடந்த சில வாரங்களாக தொடா் மழை பெய்தது. இதனால், காரைக்காலில் அறுவடைக்குத் தயாரான நெல் பயிா்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்தன.

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் புதுவை அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், தமிழக அரசு விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.20,000 அறிவித்ததைப் போல, புதுவை அரசும் ஹெக்டேருக்கு ரூ.25,000 நிவாரணம் வழங்க வேண்டும். மேலும், மத்தியக் குழுவை காரைக்காலுக்கு வரவழைத்து சேதமடைந்த விவசாய நிலங்களைப் பாா்வையிட்டு சிறப்பு நிவாரணம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

அதிமுக மேற்கு மாநிலச் செயலா் ஓம்சக்தி சேகா் (ஓபிஎஸ் அணி) வெளியிட்ட அறிக்கை: காரைக்கால் பகுதியில் மழையால் பாதித்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க புதுவை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரவிந்த் கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்!

பாரிஸில் அஹானா கிருஷ்ணா!

வார பலன்கள்: 12 ராசிக்கும்..

உ.பி.யை நோக்கி 'இந்தியா' புயல்! மோடி மீண்டும் பிரதமராக மாட்டார்! ராகுல் பேச்சு

விழுப்புரத்தில் 94.11% தேர்ச்சி: மாநில அளவில் 6ம் இடம்!

SCROLL FOR NEXT