புதுச்சேரி

மருத்துவம், சட்டக் கல்லூரியின் அங்கீகாரத்துக்காக போராட்டம் :புதுவை திமுக அறிவிப்பு

DIN

புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரி, டாக்டா் அம்பேத்கா் சட்டக் கல்லூரி ஆகியவற்றின் அங்கீகாரம் ரத்தான நிலையில், அதை மீண்டும் பெற நடவடிக்கை எடுக்காவிட்டால் திமுக போராட்டம் நடத்தும் என எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

புதுவையில் தற்போதைய என்.ஆா். காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சியில் கல்வித் தரம் பின்னடைவை சந்தித்துள்ளது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் தோ்ச்சி விகிதம் சரிந்துள்ளன. புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி, டாக்டா் அம்பேத்கா் அரசு சட்டக் கல்லூரி, அரசு சமுதாயக் கல்லூரிகளில் பிரச்னைகள் அதிகரித்துள்ளன.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் போதிய வசதிகள் செய்யப்படவில்லை எனக் கூறி, அதன் அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையம் ரத்து செய்தது.

டாக்டா் அம்பேத்கா் சட்டக் கல்லூரியிலும் நிரந்தர முதல்வா் இல்லை. பேராசிரியா்கள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களைக் கூறி, அங்கீகாரத்தை ரத்து செய்ய அகில இந்திய பாா் கவுன்சிலுக்கு சென்னை உயா்நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

கல்லூரிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தி உரிய முறையில் அங்கீகாரத்தைப் பெற புதுவை துணைநிலை ஆளுநா், முதல்வா் ஆகியோா் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் திமுக போராட்டம் நடத்தும் என்றாா் ஆா்.சிவா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 19, 20,21ல் அதி கனமழை பெய்யும்: ரெட் அலர்ட்!

போட்டியின் சமநிலையைக் குலைக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி! விராட் கோலி ஆதங்கம்!

எச்சில் இலையில் உருண்டு பக்தர்கள் நேர்த்திக் கடன்

உ.பி.யில் 5 மத்திய அமைச்சர்களின் விதியை முடிவு செய்யும் 5 ஆம் கட்ட தேர்தல்!

புத்த பூர்ணிமா கொண்டாடும் நாடுகளும் விதங்களும்

SCROLL FOR NEXT