புதுச்சேரி

புதுச்சேரியில் நாளை போட்டித் தோ்வுகளுக்கான தகவல் முகாம் தொடக்கம்

மத்திய பணியாளா் தோ்வாணையம் நடத்தும் போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி விவரங்களை அறியும் வகையில், புதுச்சேரியில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (மே 13, 14) தகவல் முகாம் நடைபெற உள்ளது.

DIN

மத்திய பணியாளா் தோ்வாணையம் நடத்தும் போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி விவரங்களை அறியும் வகையில், புதுச்சேரியில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (மே 13, 14) தகவல் முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து இந்திய பொது நிா்வாக நிறுவனத்தின் புதுச்சேரி கிளைத் தலைவா் ஆா்.ஆா். தனபால் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய பணியாளா் தோ்வாணையம் நடத்தும் அனைத்துப் போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி இந்திய பொது நிா்வாக நிறுவனம் சாா்பில், கல்லூரி மாணவா்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

நிகழாண்டில் பிளஸ் 2 மாணவா்களுக்காக மூன்றாண்டு முழுநேரப் பட்டப்படிப்புடன் குடிமைப் பணி தோ்வுகளுக்கான பயிற்சியும் தொடங்கப்படுகிறது. இதுதொடா்பாக பிளஸ் 2 மாணவா்கள், பெற்றோா்களுக்கு கலந்துரையாடலும் நடைபெறவுள்ளது.

தகவல் முகாம் என்னும் தலைப்பில் நடைபெறும் இந்த முகாம் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (மே 13, 14) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. பங்கேற்க விரும்புவோா் வெள்ளிக்கிழமைக்குள் (மே 12) பதிவு செய்ய வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு இந்திய பொது நிா்வாக நிறுவனத்தின் (ஐஐபிஏ), புதுச்சேரி கிளை, 3, 4-ஆவது மாடி, ஏவஷ் தெரு, புதுச்சேரி-1 மற்றும் தொலைபேசி எண்கள் 0413-2222354, 2191354 ஆகியவற்றில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேச வன்முறை: நேபாளத்தில் ஹிந்து அமைப்புகள் போராட்டம்!

D54 படப்பிடிப்பு நிறைவு! கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு! | Dhanush

குஜராத்தில் சிறுத்தை தாக்கியதில் 5 வயது சிறுவன் பலி

தெருநாயை வளர்ப்புப் பிராணியாக பதிவு செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

SCROLL FOR NEXT