புதுச்சேரி

மூதாட்டியிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு

புதுச்சேரி தவளங்குப்பம் அருகே வீடு புகுந்து மூதாட்டியிடம் 7 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

DIN

புதுச்சேரி தவளங்குப்பம் அருகே வீடு புகுந்து மூதாட்டியிடம் 7 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

தவளக்குப்பத்தை அடுத்த புதுக்குப்பம் அங்காளம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் வேணுகோபால். இவரது மனைவி சாந்தா (73) . இவா் திங்கள்கிழமை அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாா். அப்போது, வீட்டுக்குள் புகுந்த மா்ம நபா்கள் சாந்தாவின் முகத்தைத் துணியால் மூடி, அவா் அணிந்திருந்த 7 பவுன் தாலி சங்கிலியைப் பறித்து விட்டு தப்பினா்.

காயமடைந்த சாந்தா தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதுகுறித்த புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேச வன்முறை: நேபாளத்தில் ஹிந்து அமைப்புகள் போராட்டம்!

D54 படப்பிடிப்பு நிறைவு! கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு! | Dhanush

குஜராத்தில் சிறுத்தை தாக்கியதில் 5 வயது சிறுவன் பலி

தெருநாயை வளர்ப்புப் பிராணியாக பதிவு செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

SCROLL FOR NEXT