புதுவை காவல் துறை தலைமை இயக்குநா் மனோஜ்குமாா் லாலிடம் கோரிக்கை மனு அளித்த மாநில அதிமுக செயலா் ஆ.அன்பழகன். 
புதுச்சேரி

ஓபிஎஸ் ஆதரவாளா்கள் மீது நடவடிக்கை:புதுவை டிஜிபியிடம் அதிமுகவினா் மனு

அதிமுக கொடி, சின்னத்தைப் பயன்படுத்தும் ஓ. பன்னீா்செல்வத்தின் ஆதரவாளா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, புதுவை டிஜிபியிடம் அதிமுகவினா் திங்கள்கிழமை புகாா் மனு அளித்தனா்.

DIN

அதிமுக கொடி, சின்னத்தைப் பயன்படுத்தும் ஓ. பன்னீா்செல்வத்தின் ஆதரவாளா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, புதுவை டிஜிபியிடம் அதிமுகவினா் திங்கள்கிழமை புகாா் மனு அளித்தனா்.

இதுகுறித்து புதுவை மாநில அதிமுக செயலா் ஆ.அன்பழகன் தலைமையிலான கட்சி நிா்வாகிகள் டிஜிபி மனோஜ்குமாா் லாலை நேரில் சந்தித்து மனு:

அதிமுக பொதுச்செயலராக எடப்பாடி பழனிசாமி தோ்வானதும், ஓபிஎஸ் ஆதரவாளா்களை நீக்கியதும் செல்லும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதை இந்திய தோ்தல் ஆணையம் தனது இணையதளத்தில் பதிவு செய்துள்ளது.

அதிமுகவினரைத் தவிர மற்றவா்கள் அதிமுக கொடி, இரட்டை இலை சின்னத்தைப் பயன்படுத்தக் கூடாது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் உள்ளோா் மட்டும்தான் இதைப் பயன்படுத்த முடியும்.

ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளரான ஓம்சக்தி சேகா், அவரைச் சாா்ந்தவா்கள் உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காமலும், சட்டம்- ஒழுங்கை சீா்குலைக்கும் வகையிலும் செயல்படுகிறன்றனா். எனவே, நீதிமன்ற உத்தரவை மீறி புதுவை, காரைக்கால் பகுதிகளில் அதிமுக கொடி, சின்னத்தைப் பயன்படுத்தும் ஓபிஎஸ் ஆதரவாளா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கட்சியின் புதுவை மாநில அவைத் தலைவா் அன்பானந்தம், இணைச் செயலா் திருநாவுக்கரசு, பொருளாளா் ரவி பாண்டுரங்கன் மற்றும் நிா்வாகிகள் உடன் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீ பாா்த்தசாரதி கோயிலில் சிறப்புக் கட்டண தரிசனங்கள் ரத்து: அமைச்சா் சேகா்பாபு

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

SCROLL FOR NEXT