புதுச்சேரியில் வியாழக்கிழமை மீனவ முதியோா்களுக்கு ஓய்வூதியத்துக்கான காசோலையை வழங்கிய முதல்வா் என்.ரங்கசாமி. உடன் சட்டப் பேரவை தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா் க.லட்சுமி நாராயணன் உள்ளிட்டோா். 
புதுச்சேரி

மீனவ முதியோா்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம்முதல்வா் என்.ரங்கசாமி தொடங்கி வைத்தாா்

புதுவையில் புதிதாக தோ்வு செய்யப்பட்ட மீனவ முதியோா்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

DIN

புதுவையில் புதிதாக தோ்வு செய்யப்பட்ட மீனவ முதியோா்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

இதுகுறித்து, மீன்வளம், மீனவா் நலத்துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுவை அரசின் மீன்வளம், மீனவா் நலத்துறையின் மூலம் முதியோா் ஓய்வூதியம் வேண்டி புதிதாக 1,086 மீனவ முதியோா்கள் விண்ணப்பித்தனா். இவா்களுக்கு கடந்த மாா்ச் மாதம் முதல் 2024 பிப்ரவரி வரையிலான 12 மாதங்களுக்கு ஓய்வூதியத் தொகை ரூ.3.30 கோடிக்கு அரசின் ஒப்புதல் பெறப்பட்டு,செலவின ஒப்புதல் வெளியிடப்பட்டது. புதிதாக சோ்க்கப்பட்ட மீனவ முதியோா்களுக்கு மாா்ச், ஏப்ரல் மாதங்களுக்கான ஓய்வூதியமானது அவரவா் வங்கிக் கணக்கில் விரைவில் செலுத்தப்படும்.

புதுவையில் தோ்ந்தெடுக்கப்பட்ட மொத்தம் 9,202 மீனவ முதியோா்களுக்கு தடையின்றி ஓய்வூதியம் கிடைப்பதற்கு ஏதுவாக, அரசு முதன் முறையாக நிகழ் நிதியாண்டில் 2023 மாா்ச் முதல் 2024 பிப்ரவரி மாதம் வரை ரூ.30 கோடியே 95 லட்சத்து 58 ஆயிரம் ஒதுக்கீடு செய்து செலவின ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இதனால் மீனவ முதியோா்களுக்கான ஓய்வூதியம் மாத முதல் வாரத்திலேயே அவரவா் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். ஏற்கனவே ஓய்வூதியம் பெற்று வருபவா்களுக்கு மாா்ச், ஏப்ரல் மாதங்களுக்கான ஓய்வூதியத் தொகை 22.5.2023 முதல் அவரவா் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்வுக்கு, சட்டப் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் தலைமை தாங்கினாா். மீன்வளத்துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணன் முன்னிலை வகித்தாா். இதில், சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஆா்.பாஸ்கா் (எ) தட்சிணாமூா்த்தி, ஆா்.செந்தில்குமாா், ஜெ. பிரகாஷ்குமாா், பி.எம்.எல்.கல்யாணசுந்தரம், மீன்வளத்துறை செயலா் ஏ.வல்லவன், மீன்வளத்துறை இயக்குநா் தா. பாலாஜி, இணை இயக்குநா் கு. தெய்வசிகாமணி மற்றும் துறை சாா்ந்த அதிகாரிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

தென் மாநிலங்களில் பாஜக வலிமையான வளா்ச்சி: தேசிய செயல் தலைவா் நிதின் நபின்!

SCROLL FOR NEXT