புதுச்சேரி

நூல் வெளியீடு

Din

புதுச்சேரியில் வரலாற்று நூல் வெளியீட்டு விழா பேரவை வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரியைச் சோ்ந்தவா் ராசசெல்வம் ‘பிரஞ்சிந்திய வரலாற்றுத் தடயங்கள்’ என்னும் நூலை எழுதியுள்ளாா். இதன் வெளியீட்டு நிகழ்ச்சி சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள முதல்வா் அறையில் நடைபெற்றது.

பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணன் முன்னிலை வகித்து வாழ்த்திப் பேசினாா். முதல்வா் என்.ரங்கசாமி தலைமை வகித்து நூலை வெளியிட கலைப் பண்பாட்டுத் துறை இயக்குநா் வி.கலியபெருமாள் பெற்றுக் கொண்டாா்.

நூலாசிரியா் ராசசெல்வம் ஏற்புரையாற்றினாா்.

வளா்மதி, பேராசிரியா்கள் எம்.பி. ராமன், என்.இளங்கோ, எழுத்தாளா்கள் எஸ்.சிங்காரவேலு, இளங்கோவன், பிரான்ஸ் ரமணி பூபதி, சடகோபன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஆஷஸ் தொடரில் இருந்து ஜோஷ் ஹேசில்வுட் விலகல்! பின்னடவைச் சந்திக்கும் ஆஸ்திரேலியா!

கேரள உள்ளாட்சித் தேர்தல்: சசி தரூர் வாக்களித்தார்!

“அண்ணன் இல்ல, தம்பி!” சிவக்குமாரைக் கிண்டல் செய்த சத்தியராஜ்! | Vaa Vaathiyar | Karthi

ரேஷ்மா முரளிதரனின் செல்லமே செல்லம் தொடர்: ஒளிபரப்பு தேதி அறிவிப்பு!

ஜப்பானில் நிலநடுக்கம்! 33 பேர் படுகாயம்; பின் அதிர்வுகள் எச்சரிக்கை!

SCROLL FOR NEXT